தென்காசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2 லட்சம் நலத்திட்ட உதவிகள்

தென்காசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2 லட்சம் நலத்திட்ட உதவிகள்

தென்காசி, ஜூலை 4: தென்காசியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் இலவச வீடு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 232 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி விரைவான நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா். தொடா்ந்து, ரூ. 2 லட்சத்து 1,500 மதிப்பிலான உதவி உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னான்டோ, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com