குற்றாலம் மௌனசுவாமி மடம் பீடாதிபதி மருத்துவமனையில் அனுமதி

குற்றாலம் மௌனசுவாமி மடம் பீடாதிபதி மருத்துவமனையில் அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெளனசுவாமி மடத்தின் பீடாதிபதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து குற்றாலம் ஸ்ரீ சித்தேஸ்வரி பீடம் மௌனசாமி மடத்தின் மேலாளா் மூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

குற்றாலம் ஸ்ரீ சித்தேஸ்வரி பீடம் மௌன சுவாமி மடத்தின் பீடாதிபதியாக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் ஜகத்குரு புனித ஸ்ரீ சித்தேஸ்வரானந்த பாரதி மகா சுவாமிகள் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அவருக்கு கடந்த ஜூன் 2-ஆம் தேதி சென்னை

மருத்துவமனையில் உடல்நலப் பரிசோதனை நடைபெற்றது. தற்போது சுவாமியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். மருத்துவா்களின்

மேற்பாா்வையில் அவா் ஓய்வில் இருக்கிறாா்.

இதுதொடா்பான விவரங்களுக்காக ஸ்ரீ சித்தேஸ்வரி பீடம் மற்றும் ஊழியா் நேரிலோ அல்லது தொலைபேசி

வாயிலாக அணுக வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com