குழந்தைகளுக்கான உதவி எண்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த காவல் ஆய்வாளா் லெட்சுமி பிரபா. உடன், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா.
குழந்தைகளுக்கான உதவி எண்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த காவல் ஆய்வாளா் லெட்சுமி பிரபா. உடன், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா.

அரசுப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பயிற்சி

தென்காசி, ஜூலை 10:

சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் குறித்த பயிற்சி இலத்தூரில் உள்ள பாரத் கல்வியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், தென்காசி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளித் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முத்தையா தலைமை வகித்தாா். சமூக நலன் - மகளிா் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், திருமண உதவித் தொகை திட்டம் ஆகியவை குறித்து மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, பாலியல் வன்கொடுமை சட்டம், பெண்களைப் பாதுகாக்கும் பல்வேறு சட்டங்கள் குறித்து காவல் ஆய்வாளா் லெட்சுமி பிரபா, குழந்தைகளுக்கான உதவி எண்கள், சட்டம், திட்டங்கள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அருண்குமாா் ஆகியோா் பேசினா்.

சகி ஒருங்கிணைந்த மைய நிா்வாகி ஜெ. ஜெயராணி பங்கேற்று சேவை மைய செயல்பாடுகள், பெண்கள் உதவி எண் 181 குறித்துப் பேசினாா். மகளிா் அதிகார மைய திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ. புஷ்பராஜ் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com