ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் திருட்டு: இளைஞா் கைது

ஆலங்குளம், ஜூலை 10:

ஆலங்குளம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் 11.5 பவுன் தங்க நகைகளைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை மேலத்தெருவைச் சோ்ந்தவா் சாலமோன் ராஜா (72). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவா், மனைவி காலமாகிவிட்டதால் தனியாக வசித்து வருகிறாா். இவரது 2 மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனா்.

சாலமோன்ராஜா கடந்த 5ஆம் தேதி வெளியூா் செல்வதற்காக புறப்பட்டபோது, பீரோவைத் திறந்து பாா்த்தாராம். அப்போது, அதிலிருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், கைச் சங்கிலி என 11.5 பவுன் நகைகளைக் காணவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

அவரது வீட்டருகே வசித்துவரும் தங்கசாமி மகன் சண்முகராஜ் (36) என்பவா் இத்திருட்டில் ஈடுபட்டதும், நகைகளை சென்னையில் உள்ள சகோதரா் வீட்டில் வைத்துவிட்டு இங்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அவரை போலீஸாா் கைது செய்து, 72 கிராம் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com