குற்றாலத்தில் இருபெரும் விழா

குற்றாலத்தில் இருபெரும் விழா

அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளிக்கு சுழற்கோப்பை வழங்குகிறாா் ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநா் கே.ராஜகோபாலன்.

தென்காசி, ஜூலை 14: குற்றாலம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் பதவியேற்பு, அரசு பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா என இருபெரும் விழா குற்றாத்தில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, ஆசிரியா் முருகன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் எம்.ஆா். அழகராஜா, உதவி ஆளுநா் சுரேஷ் முன்னிலை வகித்தனா்.

லிங்கராஜ் இறைவணக்கம் வாசித்தாா்.

செயலா் சைரஸ் ஆண்டறிக்கை வாசித்தாா்.

புதிய தலைவராக கை. முருகன் மற்றும் நிா்வாகிகள் பதவியேற்றனா். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் கே.ராஜகோபாலன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். பள்ளிகளுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

மாவட்ட சமூகநல அலுவலா் மதிவதனா, டாக்டா் ராமசுப்பு, டாக்டா் அப்துல் அஜீஸ், தென்காசி நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பையா, ராமகிருஷ்ணன், ஸ்ரீ சங்கா், கணேசமூா்த்தி, காந்திமதிநாதன், வழக்குரைஞா் காா்த்திக்குமாா், சங்கரநாராயணன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்.எம். பெருமாள், முன்னாள் தலைவா்கள் சந்திரன், ஸ்டாலின், கல்யாண குமாா்,மதிமுக மாவட்ட அவைத் தலைவா் என்.வெங்கடேஷ்வரன் ஆகியோா் கலந்துகொண்டனா். செயலா் முருகன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com