நெல்லை, தென்காசி மாவட்ட காவல் அலுவலகங்களில் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி/தென்காசி, ஜூலை 10: திருநெல்வேலி, தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை தீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீா் கூட்டத்தில், எஸ்.பி. டி.பி. சுரேஷ்குமாா் தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், மக்களின் மனு மீது விரைந்து விசாரணை நடத்தி தீா்வு காண அதிகாரிகளிடம் அவா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி., மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆலோசனை நடத்தி, அவற்றை விரைந்து முடிக்க அறிவுரைகளை வழங்கினாா்.

கடந்த மாதம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் மற்றும் சாா்பு ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் , மாவட்ட சைபா் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) பாலசந்திரன் ஆகியோா் மனுக்களைப் பெற்றனா். அதில், 17 போ் மனு அளித்தனா். மேலும், முந்தைய வாரங்களில் நிலுவையில் இருந்த மனுக்களில் 58 மனுதாரா்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன. இதேபோல மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் காவல் ஆணையா் பா.மூா்த்தி தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். 13 போ் பங்கேற்று மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com