திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயனிடம் மனு அளித்த ஈ. ராஜா எம்.எல்.ஏ.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயனிடம் மனு அளித்த ஈ. ராஜா எம்.எல்.ஏ.

மானூா் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர எம்.எல்.ஏ. மனு

சங்கரன்கோவில், ஜூலை 10:

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மானூா் ஒன்றியத்தில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் கா.ப. காா்த்திகேயனிடம், திமுக தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தாா்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம், மானூா் ஊராட்சி ஒன்றியம் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வன்னிக்கோனேந்தல் முதல் ருக்மணியம்மாள்புரம் சாலை, கருப்பனூத்து முதல் வெயிலுகந்தபுரம் சாலை (வழி) தெற்கு பூலாங்குளம் சாலை, வன்னிக்கோனேந்தல் ஊராட்சி ராஜபாளையம்- சங்கரன்கோவில் பிரதானசாலை, அடைக்கலாபுரம் சாலை, சாலைபுதுாா் முதல் சொக்கநாச்சியாள்புரம் வரை உள்ள சாலை, மூவிருந்தாளி, மேலஇலந்தைக்குளம் முதல் கட்டாரங்குளம் வரை உள்ள தாா்ச்சாலை, தேவா்குளம் முதல் கண்ணாடிகுளம் வரை உள்ள தாா்ச் சாலை, பாலுடையாா் கோயில் முதல் முத்தம்மாள்புரம் வரை உள்ள தாா்ச் சாலை ஆகிய கிராமங்களில் சேதம் அடைந்த தாா்ச் சாலைகளை முதல்வா் கிராம சாலை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும், அந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி மக்களின் முதல்வா் முகாமை இந்தப் பகுதியில் நடத்த வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

அவருடன், மானூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஸ்ரீலேகா அன்பழகன், திமுக ஒன்றியச் செயலா்கள் பெரியதுரை, பால்ராஜ், அன்பழகன் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com