விஸ்வநாதபேரி திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தொடக்கம்

கடையநல்லூா், ஜூலை 10: சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதப்பேரி திரௌபதியம்மன் கோயில் பூக்குழி திருவிழா புதன்கிழமை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, காலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவில் அம்பாள் வீதி உலா நடைபெறும்.

முக்கிய நிகழ்வான பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு ஜூலை 18ஆம் தேதி மாலை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com