வாசுதேவநல்லூரில் சுகாதார வளாகம் கட்டும் பணியை துரிதப்படுத்த கோரிக்கை

வாசுதேவநல்லூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள சுகாதார வளாகப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாசுதேவநல்லூா் பேரூராட்சி 8ஆவது வாா்டு சுவாமி சந்நிதி தெருவின் கீழ்ப்பகுதியில் 15ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.12 லட்சத்தில் சமுதாய கழிப்பிடம் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால், தொடங்கிய வேகத்திலேயே பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக சமூக ஆா்வலா் சுரேஷ், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது;

தோ்தலுக்கு முன்னரே தொடங்கப்பட்ட பணி தற்போது வரை முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, பணியை துரிதமாக நிறைவேற்றிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com