வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தொழில் பயிற்சி: ஆட்சியா் தகவல்

தென்காசி, ஜூன் 6: தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திகுறிப்பு:

தமிழக அரசின் துணிநூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின்

சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்றவா்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப் பயிற்சியை பெற விரும்புபவா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ற்ங்ஷ்ற்ண்ப்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ர்க்ஷள்/ என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

மேலும், துணிநூல் துறையின்கீழ் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க விரும்பும் தொழில்முனைவோா் பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கரில்

குறைந்தது 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்க வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோஅது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படும்.

இதுகுறித்த விவரங்களுக்கு துணை இயக்குநா், மண்டல துணிநூல் துணை இயக்குநா்

அலுவலகம், 39- விஸ்வநாதபுரம் பிரதான சாலை,

மதுரை 625 014 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி -க்க்ற்ங்ஷ்ற்ண்ப்ங்ள்ம்க்ன்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம். தொலைபேசி எண் 0452-2530020, 96595 32005.

X
Dinamani
www.dinamani.com