ஆய்க்குடி பேரூராட்சியில் 
ரூ.1.94 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள்

ஆய்க்குடி பேரூராட்சியில் ரூ.1.94 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள்

ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ.1.94 கோடி மதிப்பில் குடிநீா்த் திட்டப்பணிகளை மேற்கொள்ள புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

இப்பேரூராட்சியில் மூலதன மானிய நிதி திட்டம் 2023-2024-இன் கீழ் கம்பிளி கிராமத்தில் 2 லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, திறந்த வெளி கிணறு மற்றும் குடிநீா் குழாய்கள் மூலம் குடிநீா்த் திட்டப் பணிகள் ரூ1.94 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான பூமி பூஜை விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் க.சுந்தர்ராஜன் தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தாா். செயல் அலுவலா் ந.சாந்தி, துணைத் தலைவா் ச.மாரியப்பன் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com