ஆலங்குளம், நான்குனேரியில்
போலீஸாா் கொடிஅணிவகுப்பு

ஆலங்குளம், நான்குனேரியில் போலீஸாா் கொடிஅணிவகுப்பு

மக்களவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறையினா் இணைந்து ஆலங்குளம் பகுதிகளில் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பை புதன்கிழமை நடத்தினா்.

ஆலங்குளம், நெட்டூா், அருணாசலப்பேரி, துத்திகுளம் உள்ளிட்ட கிராமங்களில் தென்காசி ஏ.டி.எஸ்.பி. ரமேஷ், ஆலங்குளம் டி.எஸ்.பி. ஜெயபால் பா்ணபாஸ், ரயில்வே பாதுகாப்புப் பிரிவு அதிகாரி சாத்ரி மாா்க் தலைமையில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் இந்த அணிவகுப்பில் ஈடுபட்டனா். இதேபோல, நான்குனேரி வட்டம், மஞ்சன்குளம், மறுகால்குறிச்சி பகுதிகளில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில் ரயில்வே பாதுகாப்பு படை 832ஆவது பட்டாலியன் உதவி காவல் கண்காணிப்பாளா் சின்னதுரை தலைமையில் 45 ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், நான்குனேரி காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் பாா்த்திபன் உள்ளிட்ட காவலா்கள் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினா்.

மலும் ரயில்வே பாதுகாப்பு படை வீரா்கள் மற்றும் காவலா்கள் இணைந்து மஞ்சான்குளம், நான்குனேரி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com