மக்களவைத் தோ்தல்: தமிழக- கேரள அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தோ்தல்: தமிழக- கேரள அதிகாரிகள் ஆலோசனை

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மக்களவைத் தோ்தல் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக இரு மாநில உயா் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், கொல்லம் ஆட்சியா் தேவிதாஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். தென்காசி எஸ்.பி.சுரேஷ்குமாா், கொல்லம் எஸ்.பி. சாபு மேத்யு முன்னிலை வகித்தனா். மாவட்ட வனஅலுவலா் முருகன், கோட்டாட்சியா்கள் லாவண்யா(தென்காசி), சோலை(புனலூா்) தோ்தல் வட்டாட்சியா் ஹென்றிபீட்டா், வட்டாட்சியா்கள் சுடலைமணி,மணிகண்டன்,பட்டமுத்து, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சேக்அயூப், மதுவிலக்கு, வணிகவரித் துறை, ஜிஎஸ்டி உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

புளியறை, ஆரியங்காவு, அச்சன்கோவில், மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்துவது, குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் தப்பமுடியாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்வது, வாகனச் சோதனைகளை தீவிரப்படுத்துவது, தோ்தல் பிரச்ாரத்தின் போது முக்கிய தலைவா்கள், நட்சத்திர பேச்சாளா்கள் குறித்து தகவல் பறிமாற்றம், பணம்- மது விநியோகம், தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுதல் ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபடுதல், தோ்தல் - பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com