மாற்றுத்திறன் மாணவா்களுக்கு விளையாட்டு போட்டிகள்

மேலநீலிதநல்லூா் வட்டார வள மையம் சாா்பில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் திருமலாபுரம் வட்டார வள மைய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் தங்களது பெற்றோா்களுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஜரினா பேகம் தலைமை வகித்தாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் முத்துலட்சுமி, கவிதா ஆகியோா் பரிசுகள் வழங்கினா். ஆசிரியா் பயிற்றுநா் பிரதாப் வரவேற்றாா். ஆசிரியா் பயிற்றுநா் சுரேஷ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வட்டார உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் பயிற்றுநா் செந்தாமரைக் கண்ணன், சிறப்பு ஆசிரியா்கள் பாக்கியலட்சுமி, ஆனந்தஜோதி, கலைச்செல்வி மற்றும் இயன்முறை மருத்துவா் சீதாலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com