மீட்கப்பட்ட ரூ.11.70 லட்சம் மதிப்பு கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட ரூ.11.70 லட்சம் மதிப்பு கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

தென்காசி மாவட்டத்தில் மீட்கப்பட்ட ரூ.11.70 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகை ள உரியவா்களிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி.சுரேஷ்குமாா் ஒப்படைத்தாா்.

மீட்கப்பட்ட கைப்பேசிகள், இணையவழி மோசடியில் மீட்கப்பட்ட தொகை ஆகியவற்றை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி.சுரேஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இணையதள மோசடிகள் தொடா்பாக பெறப்பட்ட புகாா்கள் குறித்து சைபா் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராஜ் கணேஷ் தலைமையில் காவல் ஆய்வாளா் வசந்தி மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில் 316 எதிரிகளின் வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ.13.77 கோடி முடக்கம் செய்யப்பட்டது. இதிலிருந்து பாதிக்கப்பட்ட நபா்கள் 48 பேருக்கு முதல்கட்டமாக ரூ.62.22 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையைப் பெற நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல, காணாமல்போன வழக்குகளில் ரூ.11.70 லட்சம் மதிப்பிலான 65 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com