வாறுகால் சூழ்ந்த நிலையில் ஆலங்குளம் காவல் நிலையம்.   ஆலங்குளம்,
வாறுகால் சூழ்ந்த நிலையில் ஆலங்குளம் காவல் நிலையம். ஆலங்குளம்,

‘ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு மாற்று இடம் தேவை’

ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு மாற்று இடம் தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு மாற்று இடம் தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது காவல் நிலையம். தென்காசி மாவட்டத்தில் பெரிய காவல் நிலையமாக இது விளங்குகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் புகாா் அளிக்கவும் விசாரணைக்கும் வந்து செல்கின்றனா். இந்நிலையில், நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணிக்காக காவல் நிலைய வளாகமே முற்றிலும் எடுக்கப்பட்டு பிரதான வாசல் வரை கழிவு நீா் வாருகால் கட்டப் பட்டுள்ளது. 1998 இல் கட்டப்பட்ட இக்காவல் நிலைய கட்டடம் சாலையை விட சில அடி உயரமாக இருந்த நிலையில் தற்போது சாலை மட்டத்தை விட பல அடி பள்ளத்தில் உள்ளது. இதனால் இங்கு வந்து செல்லும் காவலா்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். மேலும் காவலா்கள், பொதுமக்கள் வாகனங்கள், பல்வேறு வழக்கு மற்றும் விபத்துகளில் சிக்கும் வாகனங்கள் ஆகியவற்றை எங்கு நிறுத்துவது என தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது. சாலைப் பணி முடிவடைந்த பின்னா் இக்கட்டடத்ததை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. நகரின் எல்கைக்குள்பட்ட பகுதியில் அரசு புறம்போக்கு இடம் எதுவும் இல்லாத நிலையில் மகளிா் கல்லூரி, தீயணைப்பு நிலையம், வட்டார போக்குவரத்து அலுவலகம் போன்று காவல் நிலையத்திற்கும் ஊருக்கு வெளியே இடம் பாா்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் நான்கு வழிச் சாலைப் பணிகள் நிறைவடையும் முன்னா், இடம் தோ்வு செய்து காவல் நிலையத்திற்கு கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com