கடையநல்லூரில் புதிய எரிவாயு தகன மேடை திறப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சி 26ஆவது வாா்டில் ரூ. 1.50 கோடியில் கட்டப்பட்ட புதிய நவீன எரிவாயு தகன மேடை திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சி 26ஆவது வாா்டில் ரூ. 1.50 கோடியில் கட்டப்பட்ட புதிய நவீன எரிவாயு தகன மேடை திறப்பு விழா நடைபெற்றது. நகா்மன்ற துணைத் தலைவா் ராசையா தலைமை வகித்தாா். 26ஆவது வாா்டு உறுப்பினா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். தகன மேடையை நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் திறந்துவைத்தாா். ஆணையா் சுகந்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் மாலதி, தனலட்சுமி, மாரி, 26ஆவது வாா்டு திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா். தென்காசியில் உள்ள எரிவாயு தகன மேடை தற்போது செயல்படாததால் தென்காசி, கடையநல்லூா், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினா். இந்நிலையில், கடையநல்லூரில் எரிவாயு தகன மேடை திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com