ரயில் மறியலில் ஈடுபடமுயன்ற விவசாயிகள்.
ரயில் மறியலில் ஈடுபடமுயன்ற விவசாயிகள்.

தென்காசியில் ரயில் மறியல் முயற்சி: 48 விவசாயிகள் கைது

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 48 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 48 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெறுதல் போன்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனா். இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசியில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சாா்பில் மண்டலத் தலைவா் செல்லத்துரை உள்ளிட்ட 48 போ் தென்காசியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊா்வலமாகச் சென்றனா். அவா்களை மேம்பாலம் அருகே காவல்துறையினா் தடுத்துநிறுத்தி கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com