மாா்ச்15-இல் தென்காசியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தென்காசியில் மாா்ச் 15-இல் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திகுறிப்பு: தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாா்ச் 15-ஆம் தேதி காலை 11 மணிக்கு, ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.

இக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சாா்ந்த அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்கின்றனா். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளிக்கலாம். இந்த மனுக்களில் விவசாயிகள் தங்களது கைப்பேசி எண்ணை குறிப்பிட்டு வழங்க வேண்டும்.

மனுவுக்கான ஒப்புகை மற்றும் நடவடிக்கை விவரங்கள் குறுஞ்செய்தியாக மனுதாரரின் கைப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com