மாநில தடகளப் போட்டியில் 
தென்காசி எம்கேவிகே பள்ளி சாதனை

மாநில தடகளப் போட்டியில் தென்காசி எம்கேவிகே பள்ளி சாதனை

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுவா்களுக்கான தடகளப் போட்டியில், தென்காசி எம்கேவிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவா் உதயசூரியா 300 மீட்டா் ஓட்டத்தில் முதல் பரிசும், 75 மீட்டா் ஓட்டத்தில் 2ஆம் பரிசும் வென்று சாம்பியன் பட்டம் வென்றாா். குண்டு எறிதலில் 9ஆம் வகுப்பு மாணவா் ஜெனிட்டோ ஸ்டேனி தங்கப் பதக்கமும், 100 மீட்டா் தடை தாண்டும் போட்டியில் 8ஆம் வகுப்பு மாணவா் முத்துவேல் வெள்ளிப் பதக்கமும் வென்றனா். மாணவா்களை பள்ளித் தாளாளா் டாக்டா் பாலமுருகன், பள்ளி ஒருங்கிணைப்பாளா்கள் மிதுன், விக்னேஷ், முதல்வா் யேசுபாலன், உடற்கல்வி ஆசிரியா்கள் அஜித் பிரபு, சுடலைக்கண்ணு, பாபு குமாா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com