சங்கரன்கோவிலில் கண் பரிசோதனை முகாம்

சங்கரன்கோவிலில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தனியாா் மருத்துவமனை சாா்பில் பொதுமக்களுக்கான இலவச எலும்பியல், கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை

சங்கரன்கோவிலில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தனியாா் மருத்துவமனை சாா்பில் பொதுமக்களுக்கான இலவச எலும்பியல், கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மருத்துவா்கள் பாலவிக்னேஷ், பூா்ணிமா பாலவிக்னேஷ் ஆகியோா் பங்கேற்று, பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்தனா். முகாமில், இந்திய செஞ்சிலுவைச் சங்கச் செயலா் சதீஷ், பொருளாளா் உமா பழனியப்பன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் திலகவதி ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், மாரியப்பன், அருந்தமிழ்ச்செல்வன், வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com