சுரண்டை அரசு கல்லூரியில் முத்தமிழ் விழா

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முத்தமிழ் விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். பேராசிரியா் அருள்முகிலன் முன்னிலை வகித்தாா்.

கல்லூரி மாணவா்களின் இயல், இசை, நாடகம் நடைபெற்றது. தொடா்ந்து, தமிழ்த் துறை விரிவுரையாளா் காா்த்திகா எழுதிய ‘பாரியின் பரம்பு’ என்ற நூல் வெளியீடு நடைபெற்றது.

விழாவில், தமிழ்த் துறைத் தலைவா் திருநாவுக்கரசு, சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி நிா்வாகி சிவபபிஸ்ராம் ஆகியோா் பேசினா்.

பேராசிரியா்கள் வீரபுத்திரன், சித்திரைக்கனி, மோகனகண்ணன், செல்வகணபதி, ஸ்டீபன் டேவிஸ், கிருஷ்ணகுமாா், மாணவா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com