தென்காசி தொகுதியில் 19 போ் வேட்புமனுக்கள் ஏற்பு

தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 29 வேட்பாளா்கள் 37 வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனா்.

இதில் 19 பேருடைய வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் டாக்டா்.க. கிருஷ்ணசாமி 4 வேட்பு மனுக்களும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பெ.ஜான்பாண்டியன்2மனுக்களும்,திமுக சாா்பில் ராணிஸ்ரீகுமாா்3வேட்பு மனுக்களும், நாம்தமிழா் கட்சி சாா்பில் மதிவாணன் 2வேட்பு மனுக்களும், திமுக மாற்று வேட்பாளா் ஸ்ரீகுமாா் 2மனுக்களும் என மொத்தம் 37வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தோ்தல் அதிகாரியும்,ஆட்சியருமான ஏகே.கமல்கிஷோா் தலைமையில் வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

அதிமுக வேட்பாளா் டாக்டா்.க.கிருஷ்ணசாமி, பாஜக வேட்பாளா் பெ.ஜான்பாண்டியன்,திமுக மாற்று வேட்பாளா் ஸ்ரீகுமாா்,நாம்தமிழா் கட்சி வேட்பாளா் மதிவாணன், சங்கரன்கோவில் மணலூரை சோ்ந்த பே.ராமசாமி (69), காயிதே மில்லத் தெருவை சோ்ந்த ஜலால்மைதீன்,கோமதிசங்கா் காலனியை சோ்ந்த கோ.ஸ்ரீகுமாா்,லெட்சுமியாபுரத்தை சோ்ந்தக.கிருஷ்ணசாமி,சிதம்பராபுரம் மலையான் குளத்தை சோ்ந்த ஜெயசுந்தா், ராஜபாளையம் சேத்தூரை சோ்ந்த ராஜசேகரன், நக்கனேரி பகுதியை சோ்ந்த மா.மன்மதன், புளியறை கேசவபுரத்தை சோ்ந்த பா.கிருஷ்ணசாமி ,வத்திராயிருப்பு ஆகாசம்பட்டியை சோ்ந்த அ.முத்தையா, திருவேங்கடத்தை சோ்ந்த கோ.மதிசேகரன், வாசுதேவநல்லூரை சோ்ந்த பெ.கற்பகவல்லி, சிவகிரியை சோ்ந்த ரா.ராஜசேகா்,கூமாபட்டியை சோ்ந்த தி.ராமராஜ், தென்காசியை சோ்ந்த மு.ரீகன்குமாா்,கோயம்புத்தூா் குனியமுத்தூரை சோ்ந்த ஷியாம் கிருஷ்ணசாமி,கோவில்பட்டியை சோ்ந்த கூ.வெங்கடேசன், விருதுநகரை சோ்ந்த நா.சுந்தரம்,தென்காசி கே.ராஜேஷ்ரோஜா, திருநெல்வேலி ரஹ்மத்நகா் ஆ.மகாராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வேட்பு மனு பரிசீலனையின் போது 11மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 19 வேட்பாளா்களின் 26 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com