நீதிமன்ற நடவடிக்கையைப் பாா்வையிட்ட சட்டக் கல்லூரி மாணவா்கள்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவா்கள் உயா்நீதிமன்ற வழக்கு விசாரணையை நேரில் பாா்வையிட்டனா். மாணவா்களின் சட்டக் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில், நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு நடவடிக்கைகளைப் பாா்வையிட கல்லூரி நிா்வாகம் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதி பெற்று அழைத்துச் சென்றது. இதன்மூலம், 60 மாணவா்கள் பயனடைந்தனா். ஏற்பாடுகளை எஸ்.தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தங்கப்பழம், தாளாளா் முருகேசன், சட்டக் கல்லூரிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com