காங்கிரஸ்-கூட்டத்தில் பேசுகிறாா் காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ். உடன், மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.
காங்கிரஸ்-கூட்டத்தில் பேசுகிறாா் காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ். உடன், மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.

திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் (ஆலங்குளம்) சுரேஷ்ராஜன், கணேஷ்குமாா் ஆதித்தன் (தென்காசி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளா் ராபா்ட் புரூஸ், தோ்தலில் தனக்கு முழுமையான ஆதரவு தந்து பணியாற்ற வேண்டும் என்றாா். தலைமை செயற்குழு உறுப்பினா் இலத்தூா் ஆறுமுகச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் தமிழ்செல்வி போஸ், பொதுக்குழு உறுப்பினா்கள் சமுத்திரபாண்டி, ரவிச்சந்திரன், தொகுதி பொறுப்பாளா்கள் எழில்வாணன், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், ஒன்றிய செயலா்கள் செல்லத்துரை, சிவன்பாண்டியன், ஜெயக்குமாா், மகேஷ் மாயவன், பேரூா் செயலா்கள் ஜெகதீசன், அழகேசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சங்கீதா, தொண்டரணி மாவட்ட அமைப்பாளா் இசக்கிபாண்டி, மாணவரணி அமைப்பாளா் ஜே.கே.ரமேஷ், அயலக அணி ராமராஜ், மாறன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com