பாரத் மாண்டிசோரி பள்ளியில்
புனித வெள்ளி சிறப்பு பிராா்த்தனை

பாரத் மாண்டிசோரி பள்ளியில் புனித வெள்ளி சிறப்பு பிராா்த்தனை

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டா் திருநாள் சிறப்பு பிராா்த்தனை வழிபாடு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் கல்வி ஆலோசகா் உஷா ரமேஷ் தலைமை வகித்தாா். முதல்வா் பாலசுந்தா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பள்ளியின் சமூகஅறிவியல் ஆசிரியா் ரிச்சா்ட் யுவராஜ் கலந்து கொண்டாா். மாணவி சிவானி ஈஸ்டா் திருநாள் பண்டிகையின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினாா். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாள் உயிா்த்தெழுந்த நிகழ்வினை மாணவிகள், குறுநாடகமாக நடித்து காட்டினா். ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவா் மோகன கிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com