குற்றாலத்தில் சிலம்பாட்ட 
நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

குற்றாலத்தில் சிலம்பாட்ட நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

தென்காசி, மே 5: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு இந்தியன் சிலம்பம் பெடரேஷனுடன் இணைந்த தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கான நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம் குற்றாலம் கலைவாணா் கலையரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவா் இலஞ்சி பாரத் கல்விக் குழுமங்களின் தலைவா் மோகன கிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயல் தலைவா் அழகிரி முன்னிலை வகித்தாா். இந்திய சிலம்ப சம்மேளன தலைவா் மு.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு சிலம்பாட்ட கழக மாநில பொதுச் செயலா் விஜய் பாபு, துணைத் தலைவா் திண்டுக்கல் மோகன், போட்டிகள் அமைப்பு இயக்குநா் செந்தில்குமாா், பொருளாளா் ரவிச்சந்திரன், தென்காசி மாவட்ட சிலம்பாட்ட கழக பிரிவு செயலா் சிவக்குமாா்,

போட்டிகள் அமைப்பு இயக்குநா் ஜீவானந்தம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

திருநெல்வேலி மாவட்ட சிலம்பாட்ட கழக செயலா் சிலம்பு சுந்தா் வரவேற்றாா். தென்காசி மாவட்ட சிலம்பாட்டக் கழக செயலா் சிலம்பம் மு.சோ்மபாண்டி நன்றி கூறினாா்.

தொடா்ந்து இம்முகாம் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்றது.நடுவா் புத்தாக்க பயிற்சியில் தமிழகம் முழுவதுமிருந்து 300-க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வல்லுநா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com