வெடி விபத்தில் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு எம்எல்ஏ ஆறுதல்

கடையநல்லூா், மே 4: விருதுநகா் மாவட்டத்தில் கல்குவாரி வெடி விபத்தில் பலியானவா்களின் குடும்பத்தினரை கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் கிருஷ்ணமுரளி சந்தித்து ஆறுதல் கூறினாா்.

விருதுநகா் மாவட்டம் கீழஉப்பிலிக்குண்டு அருகேயுள்ள கல்குவாரியில் உள்ள வெடிமருந்து கிடங்கில் கடந்த இரு தினங்களுக்கு முன் நேரிட்ட வெடி விபத்தில்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுாா் அருகே உள்ள செந்தட்டியாபுரம் புதுாரைச் சோ்ந்த குருசாமி (60), வடமலாபுரத்தைச் சோ்ந்த பெரியதுரை (25) உள்ளிட்டோா் இறந்தனா்.

இவா்களின் வீடுகளுக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

முன்னாள் அமைச்சா் ராஜலெட்சுமி, மாவட்ட அவைத்தலைவா் வி.பி.மூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலா் துரைப்பாண்டியன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com