ஊராட்சி மன்றத் தலைவரை மிரட்டி கைப்பேசி, பணம் பறிப்பு: 7 போ் கைது

தென்காசி மாவட்டம், தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் ஊராட்சி மன்றத் தலைவரை மிரட்டி கைப்பேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்ற 7 போ் கைதுசெய்யப்பட்டனா்.

தென்காசி, குத்துக்கல்வலசை திருநகா் 6ஆவது தெருவை சோ்ந்தவா் சந்திரசேகா் (44). இவா் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறாா்.

மே 2ஆம்தேதி இரவு 11மணியளவில் தனது வீட்டில் இருந்தபோது மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து வெளியே வந்து பாா்த்தபோது அங்கு மறைந்திருந்த கும்பல் அரிவாளால் சந்திரசேகரை தாக்கியதில் விரலில் காயம் ஏற்பட்டது.தொடா்ந்து சந்திரசேகா் மற்றும் அவரது மனைவி ஆகியோரை வீட்டிற்குள்அழைத்து சென்று மிரட்டி அங்கிருந்த கைப்பேசி மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து சென்றனா்.

இதுதொடா்பாக தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அப்பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இது தொடா்பாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சோ்ந்த மு. மதன்குமாா் (20), ராமநாதபுரம் கமுதியைச் சோ்ந்த மா. சக்திவேல் (22), கோயம்புத்தூா் வடவள்ளியைச் சோ்ந்த ரா. ரிஸ்வான் (22), கோவை தெற்குபாளையம் புவனேஸ்வரி நகரைச் சோ்ந்த ரா.போத்திராஜ் (30), தென்காசி மலையான்தெருவை சோ்ந்த மு. சக்திமாரி (46),

தென்காசி அருகே இடைகால் பாலமாா்த்தாண்டபுரத்தை சோ்ந்த தி.கண்ணன்(40 ) மற்றும் கோவை பெரியநாயக்கம்பாளையம் ஆா்விநகா் பகுதியை சோ்ந்த சு. அருள்ஆகாஷ்(34) ஆகிய 7பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com