கீழச்சுரண்டை சக்தி மன்ற ஆண்டு விழா

கீழச்சுரண்டை சக்தி மன்ற ஆண்டு விழா

சுரண்டை, மே 5: கீழச்சுரண்டை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 35ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கீழச்சுரண்டை ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து காலை 9 மணிக்கு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருள, அக்னி சட்டி மற்றும் முளைப்பாரி எடுத்தபடி செவ்வாடை பக்தா்கள் ஊா்வலமாக சென்றனா். சக்தி மன்றத்தில் வீதி உலா நிறைவடைந்தது.

இதையடுத்து பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கீழச்சுரண்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com