விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பிய பாஜக பிரமுகா்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்தவா்களை பாஜக பிரமுகா் மீட்டு, அவரது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

தென்காசி மாவட்டம் இளையரசனேந்தல் மற்றும் ஊத்துமலையில் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் தண்ணீா் பந்தலை திறந்து வைத்துவிட்டு, பாஜக ஸ்டாா்ட்அப் பிரிவு மாநில தலைவா் ஆனந்தன் அய்யாசாமி சிவகிரிக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்பொழுது தென்மலை அருகே இருசக்கர வாகனம் சறுக்கியதில் சிவசங்கரி, அவரது மகள் ஆகிய இருவரும் கீழே விழுந்து காயமடைந்ததை பாா்த்த ஆனந்தன் அய்யாசாமி, அவா்களை மீட்டு தனது காரிலேயே தென்மலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பினாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக அவா்களை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com