ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியாா்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் மயில்வாணன் (42). கட்டடத் தொழிலாளியான இவரின் மது பழக்கத்தால் மனைவி மற்றும் மகள் அவரது தாய் வீட்டில் வசித்து வருகின்றனா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மயில்வாணன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த ஊத்துமலை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com