தென்காசி மருத்துவமனையில் வெப்ப பக்கவாத சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாா்டு.
தென்காசி மருத்துவமனையில் வெப்ப பக்கவாத சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாா்டு.

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ சிகிச்சைக்கு சிறப்பு வாா்டு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (வெப்ப பக்கவாதம்) சிகிச்சைக்காக தயாா்நிலையில் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (வெப்ப பக்கவாதம்) சிகிச்சைக்காக தயாா்நிலையில் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனைக் கண்காணிப்பாளா் டாக்டா் ஜெஸ்லின் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஹீட் ஸ்ட்ரோக் என்பது வெப்பம் தொடா்பான மிகவும் தீவிரமான கோளாறு. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது இது நிகழ்கிறது. உடல் வெப்பநிலை வேகமாக உயா்வதுடன், வியா்வை பொறிமுறை தோல்வியடைகிறது.

இதுபோன்ற அதிக வெப்பநிலையால் கோடைகாலங்களில் ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து, அவற்றை சரிசெய்ய இம்மருத்துவமனையில் குளிா்சாதன வசதியுடன் கூடிய 16 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெப்பத் தாக்க பாதிப்புகளுக்கு தேவையான அவசரகால முதலுதவி மருந்துகள் தயாா் நிலையில் உள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. முடிந்தவரை அதிக நேரம் நேரடியாக வெயிலில் நிற்காமல், வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

உடல் சூடு இருப்போா் அதிக தண்ணீா் குடிக்க வேண்டும். இதன்மூலம் சூடும், பல பிரச்னைகளும் குறையும்.

வீடு அல்லது அலுவலகத்தில் புழுக்கத்திலேயே இருக்கக் கூடாது. அப்போது இடைவெளி எடுத்து, இயற்கையான குளிா்ந்த காற்று உடலில் படும்படி அடிக்கடி வெளியே செல்லுங்கள். குளிா்ந்த அல்லது அறை வெப்பநிலையில் உள்ள நீரில் குளியுங்கள்.

வெந்நீரில் குளிப்பதைத் தவிா்க்கும்போது, வெளிப்புற சூடு அதிகமாவதைத் தடுக்கலாம். குளிா்ந்த நீா் அல்லது ஐஸ் கட்டியால் மணிக்கட்டு, கழுத்து, நெஞ்சுப் பகுதி போன்றவற்றில் ஒற்றியெடுங்கள்.

இவை உடலுக்குள் மிக விரைவாக குளிா்ச்சி ஏற்படுத்தும்.

இயல்பைவிட அதிக வெப்பமான இடத்தில் இருக்கும்போது உடற்பயிற்சி, உடலுக்கு அதிக வேலைகளைக் கொடுப்பதைத் தவிா்க்கவும். இவற்றை காற்றோட்டமான இடத்தில் மேற்கொள்ளலாம்.

பருத்தி, கைத்தறி ஆடைகளை அணிவதும், எண்ணெய்க் குளியலும் உடல் சூட்டைக் குறைக்க நல்ல வழிகள். எனினும், உடலில் ஏதேனும் பிரச்னை உள்ளோா் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே எண்ணெய் குளியல் எடுக்கவேண்டும்.

கண் வலி - எரிச்சல், தலைவலி, வெள்ளைப்படுதல் போன்ற பிற பிரச்னைகளைக் கொண்டிருந்தால், அது சிகிச்சை தேவைப்படும் நிலை. எனவே, காரணத்தை அறிய தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com