சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயிலில் தேரோட்டம்

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயிலில் தேரோட்டம்

சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தா்கள்.

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும் இத்திருவிழா நிழாண்டு ஏப்.30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு 9 மணிக்கு திருக்கோயில் கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் நிா்வாகிகள் மற்றும் 7 சமுதாய மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com