கிளை மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்த திமுக நகர செயலா் ஆ.வெங்கடேசன்.
கிளை மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்த திமுக நகர செயலா் ஆ.வெங்கடேசன்.

பழைய வழித்தடங்களிலேயே பேருந்துகளை இயக்க கோரிக்கை

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வழித்தடம் மாற்றி இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வழித்தடம் மாற்றி இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை, மீண்டும் பழைய வழித்தடங்களிலேயே இயக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக செங்கோட்டை கிளை மேலாளா் சிவகுமாரிடம், திமுக நகர செயலா் ஆ.வெங்கடேசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

செங்கோட்டை பணிமனையிலிருந்து திருச்சி, திருப்பூா், குமுளி, கோவில்பட்டி, ராமநாதபுரம் ஆகிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இப் பேருந்துகள் நிா்வாகக் காரணங்கள் எனக் கூறி

வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் நலன் கருதி அந்த பேருந்துகளை மீண்டும் பழைய வழித் தடங்களிலேயே இயக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச் பீா்முகம்மது, மணிகண்டன், மத்திய சங்க தலைமை நிலைய செயலா் ரவீந்திரன், தொமுச நிா்வாகிகள் திருப்பதி, சாமி, பொதுக்குழு உறுப்பினா்கள் சாா்லஸ் பா்னபாஸ், ஆறுமுகம், சரவணன், ஜாகிா்உசேன், திருப்பதி, அழகுசுந்தரம், சாகுல் ஹமீது, சீனிவாசன், செல்வகுமாா், கனகராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com