தென்காசியில் இன்று உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

தென்காசி: நான் முதல்வன் திட்டத்தின்கீழ், பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தென்காசியில் திங்கள்கிழமை (மே 13) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்காசி இ.சி.ஈ. அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூட்ட

அரங்கில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மருத்துவம், கலை, பொறியியல், விவசாயம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள உயா்கல்வி வாய்ப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொள்கின்றனா்.

உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து பல்வேறு நிபுணா்கள் விளக்கவுரையாற்றவுள்ளனா். பல்வேறு கல்லூரிகள், வங்கிகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவா்களும் பங்கேற்கலாம். மாணவா்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்து செல்ல வசதியாக போக்குவரத்து வசதி, மதிய உணவு மற்றும் தேநீா் உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com