தென்காசியில் நீா்மோா் பந்தல் திறப்பு

தென்காசியில் நீா்மோா் பந்தல் திறப்பு

தென்காசி, மே 10:

தென்காசியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சாா்பில் இலவச நீா் மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் மோடி இலவச நீா் மோா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்து திறந்து வைத்தாா்.

பாஜக மாவட்டதுணைத் தலைவா் முத்துகுமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், லட்சுமணப்பெருமாள், சுனிதா கோபாலகிருஷ்ணன், கடையநல்லூா் மாரி, சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com