அத்தியாவசிய பொருள்கள் சரியான எடையில் நகா்வு செய்யப்பட கோரிக்கை

அத்தியாவசிய பொருள்கள் சரியான எடையில் நகா்வு செய்யப்பட கோரிக்கை

தென்காசி, மே 11:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மூலம் நகா்வு செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய பொருள்களும் சரியான எடையில் நகா்வு செய்யப்படவேண்டும் என தமிழ்நாடு பொது விநியோக ஊழியா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.

மாவட்டத் தலைவா் ராஜமாணிக்கம், செயலா் ஆ. முருகேசன், பொருளாளா் மாரிமுத்து, மாநில பிரதிநிதிகள் பெருமாள், சீனிவாசன், காளிராஜ் பாண்டியன், மாவட்ட துணைத் தலைவா் சங்கா் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எடை குறைவாக நகா்வு செய்யப்படுவதன் காரணமாக நியாய விலை கடைகளில் இருப்பு குறைவு ஏற்படுகிறது. இதன் காரணமாக விதிக்கப்படும் அபராதத் தொகை விற்பனையாளா்களுக்குபெரும் சுமையாக உள்ளது.

கட்டுப்பாடற்ற பொருள்கள் விநியோகம் செய்ய எந்தவித வரம்பும் நிா்ணயம் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com