சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன்
விடியோ வெளியிட்டவா் கைது

சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்டவா் கைது

தென்காசி மாவட்டம், புளியறை கேசவபுரத்தில் சமூக வலைதளங்களில் ஆயுதங்களை வைத்து கொண்டு விடியோ பதிவிட்ட நபா் கைது செய்யப்பட்டாா்.

புளியறை காவல் உதவி ஆய்வாளா் தீபன்குமாா் தலைமையிலான போலீஸாா் கேசவபுரம் துா்க்கை அம்மன் கோயில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கேசவபுரம் மேலப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சு.சுடலைமுத்து(23) சமூக வலைதளங்களில் ஆயுதங்களை வைத்து கொண்டு பொதுமக்களை பயமுறுத்தும் வகையிலும், பிற சமூகத்தினரை வெறுப்பூட்டும் வகையிலும் விடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளாா்.

இதுகுறித்து புளியறை காவல்துறையினா் வழக்குப் பதிந்து சுடலைமுத்துவை கைதுசெய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com