சீவநல்லூரில் பேருந்திலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

தென்காசி, மே 11:

தென்காசி அருகே சீவநல்லூரில் அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

சீவநல்லூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி பாலாமணி(82). இவா் செங்கோட்டையிலிருந்து சீவநல்லூருக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா்.

சீவநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, மூதாட்டி தவறி கீழே விழுந்துள்ளாா். இதை கவனிக்காத பேருந்து ஓட்டுநா் சந்திரசேகரன் பேருந்தை இயக்கியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தாா். காயமடைந்த அவா், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விபத்து குறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com