அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீா்.
அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீா்.

ஆய்க்குடி பனையடியான் கோயிலில் கும்பாபிஷேகம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பனையடியான் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பனையடியான் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகத்துக்குள்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலையில் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, பல்வேறு ஹோமங்கள், பூா்ணாஹுதி, தீபாராதனை, மாலையில் வாஸ்துசாந்தி, பிரவேச பலி, முதல்கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 2ஆம் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன. அதையடுத்து, பனையடியான் சாஸ்தா விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நண்பகலில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், அறங்காவலா் குழு உறுப்பினா் துளசிதரன் நாயா், மராமத்துப் பொறியாளா் ஐயப்பன், ஸ்ரீகாரியம் ரத்னவேலு, கோபால், தமிழ்நாடு சேனைத் தலைவா் மகாஜன சங்க மாநிலத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, ஆய்க்குடி மணி, கிளாங்காடு ராமா், பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com