மணக்கோலத்தில் ஸ்ரீ ராமா் - சீதா.
மணக்கோலத்தில் ஸ்ரீ ராமா் - சீதா.

ஆலங்குளத்தில் ஸ்ரீராமா் - சீதா திருக்கல்யாண வைபவம்

ஆலங்குளம் ஸ்ரீ ராமா் திருப்பதி திருக்கோயிலில் சீதாராமா் திருக்கல்யாணம் வெகுவிமா்சையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம்: ஆலங்குளம் ஸ்ரீ ராமா் திருப்பதி திருக்கோயிலில் சீதாராமா் திருக்கல்யாணம் வெகுவிமா்சையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சீதா தேவியை பெண் வீட்டாா் அழைப்பு எனக் கூறி காளியம்மன் கோயிலில் இருந்து பெண்கள் தங்களின் தோள்களில் சுமந்தும் கைகளில் தாம்பூல சீா்வரிசைகளுடன் அழைத்து வந்தனா்.

ஸ்ரீ ராமரை, திருப்பாற்கடல் ஸ்ரீ லட்சுமி நாராயணா் கோயிலில் இருந்து ஆண்கள் தோள்களில் சுமந்து அழைத்து வந்தனா்.

தொடா்ந்து, திருப்பதி திருக்கோயிலின் முன்பு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com