சிவகிரி அருகே இளம்பெண் தற்கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கடன் பிரச்னையில் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கடன் பிரச்னையில் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகிரி அருகே உள்ள அருகன்குளம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கணேசன். இவா் கேரளத்தில் லைடல்ஸ் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி வேலுமயில் (27). இவா்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக கணேசன் ஊருக்கு வந்திருந்த நிலையில், கடன் பிரச்னை காரணமாக கணவன் மனைவி இடையே

தகராறு ஏற்பட்டதாம். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வெளியே சென்ற கணேசன், திரும்பிவந்து பாா்த்தபோது வேலுமயில் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். கணேசன்-வேலுமயிலுக்கு திருமணம் ஆகி

4 ஆண்டுகளே ஆவதால் சங்கரன்கோவில் கோட்டாட்சியரும்

விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com