சிறப்பிடம் பிடித்த மாணவா்-மாணவிகளைப் பாராட்டிய பள்ளி முதல்வா் பொன்னழகன்.
சிறப்பிடம் பிடித்த மாணவா்-மாணவிகளைப் பாராட்டிய பள்ளி முதல்வா் பொன்னழகன்.

திருவேங்கடம் கலைவாணி பள்ளியில் பாராட்டு விழா

10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடத்தில் உள்ள ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இப்பள்ளியில் தோ்வெழுதிய 262 மாணவா்-மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மதுமிதா 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தாா். செ. காயத்ரி, ரா. பிரவீன்பாபு ஆகியோா் 494 மதிப்பெண்களுடன் 2ஆம் இடமும், ச. காவியா 490 மதிப்பெண்களுடன் 3ஆம் இடமும் பிடித்தனா்.

கணிதத்தில் 15 போ், அறிவியலில் 3 போ், சமூக அறிவியலில் 6 போ் முழு மதிப்பெண்கள் பெற்றனா். 87 போ் 450-க்கு மேலும், 67 போ் 400-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மாணவா்-மாணவிகளை பள்ளி முதல்வா் வெ. பொன்னழகன், ஆசிரியா்கள்,பொதுமக்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com