மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லினுக்கு பாராட்டு தெரிவித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லினுக்கு பாராட்டு தெரிவித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

தென்காசி அரசு மருத்துவமனைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாராட்டு

தமிழக அளவில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதலிடம் பிடித்ததற்காக மருத்துவமனையின்

தென்காசி: தமிழக அளவில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதலிடம் பிடித்ததற்காக மருத்துவமனையின் இணை இயக்குநா், கண்காணிப்பாளருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.

மத்திய அரசு வழங்கும் மாநில அளவிலான அனைத்து மருத்துவமனைகளின் காயகல்ப மதிப்பீட்டில் தமிழகத்தில் இந்த மருத்துவமனை முதலிடம் பெற்று, ரூ. 50 லட்சம் பரிசு வென்றுள்ளது.

இதையடுத்து, மருத்துவமனையின் இணை இயக்குநா் (நலப் பணிகள்) பிரேமலதா, கண்காணிப்பாளா் டாக்டா் ஜெஸ்லின் ஆகியோருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கணபதி, அயூப்கான், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆசிரியா் மாரியப்பன், லெனின்குமாா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com