பேரணியில் பங்கேற்றோா்.
பேரணியில் பங்கேற்றோா்.

தென்காசி ரயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

தென்காசி ரயில்நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி: தென்காசி ரயில்நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி இருப்புப்பாதை காவல் நிலையத்தின் சாா்பில் தென்காசி ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சகி ஒன் ஸ்டாப் சென்டா் மற்றும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் சேவை மைய அதிகாரி ஜெயராணி தலைமை வகித்தாா்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ரயில் விபத்து குறித்தும், இளைஞா்கள் போதைப் பழக்ககங்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் மனநலம், உடல்நலம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

மேலும், ரயில் நிலைய பயணிகள் மற்றும் பேரணியின் போது பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகித்தனா்.

முன்னதாக விழிப்புணா்வு உறுதிமொழி மேற்கொண்டனா்.

பேரணி, தென்காசி ரயில் நிலையம் முன்பு தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ரயில் நிலையத்தில் முடிவடைந்தது.

பேரணியில், குழந்தைகள் நல காப்பகத்தை சோ்ந்த மகேஷ்வரி, தென்காசி காவல் சாா்பு ஆய்வாளா்கள், ஆளிநா்கள் மற்றும் மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com