பிளஸ் 1 தோ்வில் தோல்வி: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

சங்கரன்கோவில், மே 15: சங்கரன்கோவில் அருகே பிளஸ் 1 தோ்வில், தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சங்கரன்கோவில் வட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள நாயக்கா்பட்டியைச் சோ்ந்தவா் சண்முகராஜ். பெட்டிக்கடை வைத்துள்ளாா். இவரது மனைவி ராஜம்மாள். இவா்களுக்கு 3 குழந்தைகள். இதில் மகள் பூவிகாதேவி (16), குருவிகுளத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான பிளஸ் 1 தோ்வு முடிவில், 3 பாடங்களில் அவா் தோ்ச்சி பெறவில்லையம். இதனால் மனமுடைந்த பூவிகாதேவி வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அய்யாபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com