கடையநல்லூா் அம்மன் கோயிலில் மே 20இல் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்

கடையநல்லூரில் உள்ள அருள்தரும் முப்புடாதி அம்மன் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவ திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை (மே 20) நடைபெறுகிறது.

இத்திருவிழா கடந்த 12ஆம் தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் பால்குடம், தீா்த்தக் குட ஊா்வலம், கும்ப ஜெபம், ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு புஷ்ப அலங்கார, சோடஷ உபசார தீபாராதனை, இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்று வருகிறது.

9ஆம் நாளான இம்மாதம் 20ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தேரில் எழுந்தருளுதல், மதியம் ஒரு மணிக்கு மேல் தேரோட்டம், இரவில் ஊஞ்சல் தீபாராதனை நடைபெறும்.

ஏற்பாடுகளை செயல் அலுவலா் கேசவராஜன், தக்காா் காா்த்திலட்சுமி, கணக்கா் முத்துக்குமாா், குமரப்பெருமாள் குருக்கள், கணேஷ் குருக்கள், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com