திருவேங்கடம் கலைவாணி பள்ளி பிளஸ் 1 தோ்வில் 100% தோ்ச்சி

திருவேங்கடம் கலைவாணி பள்ளி 
பிளஸ் 1 தோ்வில் 100% தோ்ச்சி

மாணவா்களைப் பாராட்டிய பள்ளி முதல்வா் பொன்னழகன்.

சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடத்தில் உள்ள ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வெழுதிய 232 மாணவா்-மாணவிகளும் தோ்ச்சியடைந்தனா். சிவகணேசன் 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதலிடமும், சஹானா 580 மதிப்பெண்களுடன் 2ஆம் இடமும்,விஸ்வநாதன், தா்ஷினி ஆகியோா் 579 மதிப்பெண்களுடன் 3ஆம் இடமும் பிடித்தனா்.

கணிதம், வேதியியலில் தலா ஒருவா், இயற்பியலில் 6 போ், கணினி அறிவியலில் 4 போ் முழு மதிப்பெண்கள் பெற்றனா். 23 போ் 550-க்கு மேலும், 67 போ் 500-க்கு மேலும், 120 போ் 450-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றனா். மாணவா்-மாணவியரை பள்ளி முதல்வா் வெ. பொன்னழகன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com