நடுவக்குறிச்சியில் நாளை மின்தடை

நடுவக்குறிச்சி உபமின்நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளால் வியாழக்கிழமை (நவ.21) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Published on

சங்கரன்கோவில் அருகேயுள்ள நடுவக்குறிச்சி உபமின்நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வியாழக்கிழமை (நவ.21) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

பெரியகோவிலான்குளம்,சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி, வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைசெய்யப்படும் என மின்வாரிய கோட்டப் பொறியாளா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com